/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதம் மாறி சென்றவர்களுக்கு சலுகைகள் வழங்க கூடாது ஹிந்து மக்கள் கட்சி மனு

ADDED : டிச 03, 2024 05:32 AM

பரமக்குடி: மதம் மாறிச் சென்றவர்களுக்கு ஹிந்து மதத்தில் உள்ள சலுகைகளை வழங்கக் கூடாது என ஹிந்து மக்கள் கட்சி சார்பில் பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுரிடம் மனு அளித்தனர்.
கட்சியின் தென் மண்டல செயலாளர் கருணாகரன், மாவட்ட செயலாளர் துரை மாணிக்கம்,மாவட்ட அமைப்பாளர் முனியசாமி, நகர் தலைவர் சரவணன், ஒன்றிய தலைவர் பாலா உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
தென்மண்டல செயலாளர் கருணாகரன் கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தில் புதுச்சேரியை சேர்ந்த செல்வராணி தொடர்ந்த வழக்கில் நீதிபதி மகாதேவன் 'மதம் மாறிச் சென்றவர்கள் ஹிந்து மதத்தில் சலுகைகளை பெற முடியாது,' என தீர்ப்பளித்துள்ளார். எனவே தமிழகத்திலும் சான்றிதழ் அடிப்படையில் ஹிந்துவாகவும், நடைமுறையில் கிறிஸ்தவராகவும் மதம் மாறி சென்றவர்கள் இரட்டை சலுகை முறையை அனுபவிக்கின்றனர். இது அம்பேத்கர் வகுத்த சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.
இது போன்றவர்களை கண்டறிந்து சலுகைகளை நிறுத்த வேண்டும். அனுமதி இன்றி நடத்தப்படும் ஜெப கூட்டங்களை கண்காணித்து தடை செய்ய வேண்டும் என்றார்.