ADDED : செப் 23, 2025 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தமுடையவர் கோயில் உள்ளது. சீதையை மீட்கும் பொருட்டு ராமபிரான் இவ்வழியே செல்லும் போது இங்கு இளைப்பாறினார்.
அவருக்கு தாகம் ஏற்படவே அகத்தியர் தீர்த்தம் உண்டாக்கி கொடுத்ததாக வரலாறு உள்ளது. அமாவாசை நாட்களில் பொதுமக்கள் அங்குள்ள கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். புரட்டாசி மகாளயஅமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கடலில் புனித நீராடி சகலதீர்த்தமுடையவர், சவுந்தர நாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.