UPDATED : ஜூலை 14, 2026 04:11 PM
ADDED : ஜூலை 14, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: ராமபிரான் ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் வழியில் வழிபட்ட தலங்களில் ஒன்றாகக் தீர்த்தாண்டதானம் கருதப்படுகிறது. ராமபிரான் தந்தை தசரதருக்குத் திதி கொடுக்க நினைத்த போது, அனைத்துப் புண்ணிய நதிகளும் இங்கே தீர்த்தமாக உருவெடுத்ததாக ஐதீகம். இதனாலேயே இந்த ஊர் தீர்த்தாண்டதானம் (தீர்த்தங்கள் ஆடிய தானம்) என்று அழைக்கப்படுகிறது.
ஆனி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமைந்துள்ள சர்வ தீர்த்தேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி ஊர்வலம், அன்னதானம் நடந்தது.
------
