/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புனித ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா துவக்கம்
/
புனித ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா துவக்கம்
ADDED : செப் 27, 2025 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மறைவட்ட அதிபர் சிங்கராயர் தலைமை வகித்தார். சிவகங்கை வல்லனி பங்குப் பணியாளர் பிலிப் சேவியர் கொடியேற்றினார்.
தினமும் மாலை 5:00 மணிக்கு பாவ சங்கீர்த்தனம் வழங்கப்படும். மாலை 6:00 மணிக்கு ஜெபமாலையும், திரு உருவப் பவனியும், நவநாள் திருப்பலியும் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக அக்.,4ல் திருப்பலி, தேர்ப்பவனி, அக்., 5ல் பெருவிழாத் திருப்பலி, நற்கருணைப் பவனி நடக்கும். அக்.,7 மாலை 6:15க்கு புனித ஜெபமாலை அன்னை விழாத் திருப்பலியும், இறுதியாக அன்னையின் திருஉருவப் பவனியும் நடைபெறும்.