/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவமனை வளாகத்தில் தேன் கூடு: நோயாளிகள் அச்சம்
/
மருத்துவமனை வளாகத்தில் தேன் கூடு: நோயாளிகள் அச்சம்
மருத்துவமனை வளாகத்தில் தேன் கூடு: நோயாளிகள் அச்சம்
மருத்துவமனை வளாகத்தில் தேன் கூடு: நோயாளிகள் அச்சம்
ADDED : அக் 30, 2025 03:49 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் தேன் கூடு இருப்பதால் நோயாளிகள் அச்சமடைகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் புற நோயாளிகள் பிரிவு, தீவிர அவசர சிகிச்சை பிரிவு, ஸ்கேன் மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடத்தின் வெளிப் புறத்தில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது.
தினமும் நுாற்றுக் கணக்கானோர் வந்து செல்வதால் அப்பகுதியில் உள்ள தேன்கூடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேன் கூடு இருப்பதால் அப்பகுதியில் சிகிச்சை பெறும் உள் நோயாளிகளும் அச்சத்துடன் உள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையில் உள்ள தேன் கூட்டை தகுந்த பாதுகாப்புடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.