ADDED : அக் 16, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தேவர் வாழ்ந்த வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து தரையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார்.
நினைவிட பொறுப்பாளர்கள் பழனி, தங்கவேலிடம் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார். உடன் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.