/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் 2வது நாளாகப் போராட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் 2வது நாளாகப் போராட்டம்
ADDED : ஜன 29, 2025 06:31 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் சம்பள உயர்வை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் 2வது நாளாக நேற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ராமநாதபுரம் அச்சுந்தன்வயலில் உள்ள சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் அனைத்து கவுரவ விரிவுரையாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அரசு கலைக்கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதச்சம்பளமாக ரூ.25ஆயிரம் வழங்கப்படுகிறது.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அறிவித்தபடி குறைந்தபட்ச சம்பளம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.
பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2வது நாளாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.