/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏ.டி.எம்., களில் வெறி நாய் கூட்டம்; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
/
ஏ.டி.எம்., களில் வெறி நாய் கூட்டம்; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
ஏ.டி.எம்., களில் வெறி நாய் கூட்டம்; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
ஏ.டி.எம்., களில் வெறி நாய் கூட்டம்; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
ADDED : ஆக 27, 2025 12:29 AM

கீழக்கரை; கீழக்கரை நகர் பகுதிகளில் பத்திற்கும் அதிகமான ஏ.டி.எம்., மையங்களில் வெறிநாய்கள் கூட்டமாக புகுந்து விடுகின்றன. நகராட்சி நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்தாமல் கண்டு கொள்ளாமல் உள்ளது.
பொதுமக்கள் ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பதற்காகவும் அல்லது செலுத்துவதற்காகவும் அதிகளவு ஏ.டி.எம்., மையங்களை நாடுகின்றனர். பெரும்பாலான ஏ.டி.எம்., களில் ஏ.சி., பொருத்தியுள்ளனர். அப்பகுதியில் திரியும் தெரு நாய்கள் ஐந்திற்கும் மேற்பட்டவை கூட்டமாக ஏ.டி.எம்., மிஷின்களின் அருகே பகல் மற்றும் இரவு நேரங்களில் புகுந்து விடுகின்றன.
இதனால் அவசர தேவைக்காக பணம் எடுக்கக்கூடிய வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்., மையத்திற்குள் நுழைந்த நாய்களின் குரைக்கும் சத்தத்தால் அச்சமடைந்து அவற்றை விரட்டி விட்டு பின்னர் பணம் எடுத்துச் செல்லும் நிலை ஏற்படுகிறது. தன்னார்வலர்கள் கூறியதாவது: கீழக்கரை நகர் பகுதிகளில் அதிகளவு தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய நகராட்சி நிர்வாகம் மெத்தனமாகவே உள்ளது. நாய்களை பிடிப்பதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏ.டி.எம்., மையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதே சவாலாக உள்ளது என்றனர்.

