/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கிணற்றில் விழுந்த குதிரை மீட்பு
/
ராமேஸ்வரம் கிணற்றில் விழுந்த குதிரை மீட்பு
ADDED : மே 18, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் வனப்பகுதியில் பயன்பாடற்ற கிணற்றில் விழுந்த மட்ட குதிரையை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
ராமேஸ்வரம் வடகாடு கிராமத்திற்கு செல்லும் சாலை கிழக்கு பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் நீர்பிடிப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் ஏராளமான மட்டக்குதிரைகள் வசிக்கின்றன. இதில் ஒரு குதிரை இப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து கனைத்தது.
இதனை அவ்வழியாக சென்ற வடகாடு கிராமத்தினர் கண்டதும், ராமேஸ்வரம் தீயணைப்பு துறைக்கு தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயறு கட்டி மட்ட குதிரையை மீட்டனர்.