/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தென்னை மரத்தில் வெள்ளை ஈ பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் தோட்டக்கலைத்துறை தகவல்

ADDED : ஏப் 21, 2025 05:41 AM
திருப்புல்லாணி: ரெகுநாதபுரம் அருகே நயினாமரைக்கான் கிராமத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் தென்னை விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
ரெகுநாதபுரம், நயினாமரைக்கான், முத்துப்பேட்டை, பெரியபட்டினம், வண்ணாங்குண்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு தென்னை மரங்கள் உள்ளன.
இவற்றில் வெள்ளை ஈ பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக செயல்விளக்க பயிற்சி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் அளிக்கப்பட்டது.
வேளாண் பல்கலை பேராசிரியர் ராம்குமார் கூறியதாவது:
ராக்கர்ஸ் ஸ்பிரேயர் கொண்டு தண்ணீரை வேகமாக பீச்சி அடிப்பதன் மூலமும், என்கார்சியா ஒட்டுண்ணிக் குளவியை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட இலையின் மீது வைத்து கட்டுப்படுத்தலாம்.
கரும்பூசணத்தை கட்டுப்படுத்த மைதா மாவு கரைசல் ஒரு லி., தண்ணீரில் 25 கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம். மஞ்சள் ஒட்டும் பொறி ஏக்கருக்கு 20 என ஆறடி உயரத்தில் நான்கு மரங்களுக்கு இடையில் கட்டுவதாலும், தண்டுப் பகுதியில் மரத்தைச் சுற்றி கட்டுவதாலும் வெள்ளை ஈக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்றார்.
ஏராளமான விவசாயிகள் பங்கேற்று சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர்.
ஏற்பாடுகளை திருப்புல்லாணி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தினர் செய்திருந்தனர்.