/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடி தர்கா வளாகத்தில் மருத்துவமனை திறப்பு
/
ஏர்வாடி தர்கா வளாகத்தில் மருத்துவமனை திறப்பு
ADDED : மார் 23, 2025 03:55 AM
கீழக்கரை : ஏர்வாடி தர்காவில் மார்க்க மருத்துவமனை எனப்படும் தவா துவா இயங்கி வருகிறது.
ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா நாயகம் தர்காவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் யாத்ரீகர்களும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் 2014ல் தர்கா வளாகத்தில் மார்க் மருத்துவம் எனப்படும் ஆன்மிக சிகிச்சை மையம் துவங்கப்பட்டது.
இந்நிலையில் சில ஆண்டுகளாக இதன் பணிகள் தொய்வாகவும் செயல்பாடின்றியும் இருந்தது.
இது தொடர்பாக கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவின் படி ராமநாதபுரம் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் பிரகலாதன் தலைமையில் தவா துவா மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
ஏர்வாடி அரசு மனநல மருத்துவமனை, தர்கா நிர்வாகம் சார்பில் மார்க்க மருத்துவமனையில் டி.எஸ்.பி., பாஸ்கரன், ஏர்வாடி அரசு மனநல மருத்துவமனை தலைமை டாக்டர் ஜவாஹிர் உசேன், டாக்டர் அர்ஷித் காட்கில் மற்றும் ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.