ADDED : நவ 03, 2024 04:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்கிறது.
முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி ஊராட்சி கருங்காலகுறிச்சி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கஸ்துாரி ஓட்டு வீட்டில் வசிக்கிறார்.
மழையால் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தற்போது வீடு இல்லாமல் தவிக்கிறார். வெங்கலக்குறிச்சி ஊராட்சி தலைவர் செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.