ADDED : டிச 14, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அவ்வபோது மழை பெய்வதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். விவசாயிகள் விவசாயப் பணிகளில் தீவிரம் காட்டுன்றனர்.
கமுதி அருகே நகர்பூலாங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். மழையால் இவரது வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. சுவர் வெளிப்பக்கமாக விழுந்ததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாண்டி கோரிக்கை விடுத்தார்.