ADDED : செப் 11, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி மகாசக்திபுரத்தை சேர்ந்தவர் வள்ளி 35. மீனவ குடும்பத்தை சேர்ந்த இவர் கூலி வேலைக்கு செல்வது வழக்கம். குடிசை வீட்டில் வசித்தார். நேற்று காலை சுவாமி அறையில் விளக்கேற்றி விட்டு அணைக்காமல் வேலைக்கு சென்று விட்டார். இதில் தீ பரவி வீடு எரிந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்தனர்.
இருந்த போதும் பெரும்பாலான பொருட்கள் எரிந்து வீணாகியது. வருவாய்த்துறையினர் பார்வையிட்டு நிவாரண உதவி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
