/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.7 கோடியில் ராமேஸ்வரம் கோயில் ஊழியருக்கு வீடுகள்
/
ரூ.7 கோடியில் ராமேஸ்வரம் கோயில் ஊழியருக்கு வீடுகள்
ரூ.7 கோடியில் ராமேஸ்வரம் கோயில் ஊழியருக்கு வீடுகள்
ரூ.7 கோடியில் ராமேஸ்வரம் கோயில் ஊழியருக்கு வீடுகள்
ADDED : ஜூன் 18, 2025 11:38 PM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஊழியர்களுக்கு ரூ.7 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது.
ராமேஸ்வரம் கோயிலில் அதிகாரிகள், குருக்கள், ஊழியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். இவர்களுக்கு கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.7 கோடியில் 18 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டடம் கட்டுவதற்கு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலம் துவக்கி வைத்தார்.
ராமேஸ்வரத்தில் கோயிலுக்கு சொந்தமான வேதவனக்கொல்லையில் நடந்த காணொளி நிகழ்ச்சியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. இதில் கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் பங்கேற்று கட்டுமானப் பணிகள் குறித்து கோயில் இணை ஆணையர் செல்லத்துரை, உதவி ஆணையர் ரவீந்திரன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.