/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் அவதி
/
ராமேஸ்வரத்தில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் அவதி
ADDED : ஜன 11, 2024 04:35 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் நோய் பரவும் பீதியில் மக்கள் உள்ளனர்.
ஜன.9ல் ராமேஸ்வரத்தில் 7 செ.மீ., பாம்பனில் 6 செ.மீ., தங்கச்சிமடத்தில் 9 செ.மீ., மழை பெய்தது. இம்மழையால் ராமேஸ்வரம் நகராட்சி 17வது வார்டில் உள்ள வேர்க்கோட்டில் 20க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
இதனால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறவும், மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
இப்பகுதியில் மழைக்காலத்தில் தேங்கும் நீரை வெளியேற்ற வடிகால் அமைக்க மக்கள் பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இதனால் இந்த ஆண்டும் குளம்போல் மழைநீர் பல மாதங்கள் தேங்கும் அவலம் உள்ளது. இங்கு கொசுக்கடியால் மக்கள் அவதிப்பட்டு தொற்று நோய் பரவும் பீதியில் உள்ளனர்.
எனவே மழைநீரை வெளியேற்றவும் வடிகால் அமைக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.