/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீட்டு வசதி வாரியம் வட்டி சலுகை அறிவிப்பு
/
வீட்டு வசதி வாரியம் வட்டி சலுகை அறிவிப்பு
ADDED : ஆக 20, 2025 07:04 AM
ராமநாதபுரம்; ராமநாதபுரம், சிவகங்கை திட்டப்பகுதிகளில் உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் 2015 மார்ச் 31க்கு முன்பு ஒதுக்கீடு பெற்று தற்போது வரை தவணைத் தொகை செலுத்தாவர்களுக்கு வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை செலுத்தாத மாதத் தவணைக்கான அபராத வட்டியும், வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்.
நிலத்திற்கான இறுதி விலை வித்தியாச தொகையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஐந்து மாதங்கள் வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
தவணைக் காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்கள் 2026 மார்ச் 31க்குள் நிலுவை தொகையை ஒரே தவணையாக செலுத்தி இடத்திற்கான கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.