முதுகுளத்துார் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன்: அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டி உறுதி
முதுகுளத்துார் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன்: அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டி உறுதி
ADDED : ஏப் 05, 2026 08:15 PM

முதுகுளத்துார்:முதுகுளத்துார் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன் என்று அ.தி.மு.க., வேட்பாளர் மலேசியா பாண்டி உறுதியளித்தார்.
முதுகுளத்துர் தொகுதிக்குட்பட்ட கருப்புப்பிள்ளை மடம், வளநாடு, தெய்வதானம், செங்கற்படை, மட்டியரேந்தல், தாழியரேந்தல், கடம்போடை, பூசேரி, ஆதங்கொத்தங்குடி, பெரியஇலை, ஏர்வாடி, சின்ன ஏர்வாடி, ஆதம்சேரி, சேரந்தை, தனிச்சியம், தத்தங்குடி உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் முதுகுளத்துார் தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளர் மலேசியா பாண்டி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.உடன் எம்.பி., தர்மர், அ.தி.மு.க., சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரவீன்குமார், முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்புசாமி, பா.ம.க.,ஒன்றிய செயலாளர் பாலமுருகன்,த.ம.மு.க., மாவட்ட செயலாளர் ராஜபாண்டியன் உட்பட தே.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
வேட்பாளர் மலேசியா பாண்டியன் பேசியதாவது, முதுகுளத்துார் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன். ஏர்வாடியில் சுற்றுலா தளம் மேம்படுத்தப்படும். துாண்டில் வளைவு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கவும், இப்பகுதியில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
