தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கொள்கைக்காக வேலை செய்கிறேன்: சீமான்

 கொள்கைக்காக வேலை செய்கிறேன்: சீமான்

 கொள்கைக்காக வேலை செய்கிறேன்: சீமான்


ADDED : நவ 27, 2025 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2025 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சீமான் கருத்து

பரமக்குடி: செய்தியாளர்கள் நிறுவனத்திற்காக வேலை செய்கிறார்கள், நான் கொள்கைக்காக வேலை செய்கிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

பரமக்குடியில் அவர் கூறியதாவது:

இரண்டு மாதத்தில் தேர்தல் வரவுள்ளது. செங்கோட்டையன் இப்போது பதவி விலகுவதால் எந்த பெரிய தாக்கமும் ஏற்படாது. வேறு ஒரு கட்சிக்கு அவர் செல்லும் போது இருந்த கட்சியில் பெற்ற பதவி தேவையில்லை என்று நினைத்திருக்கலாம்.

செய்தியாளர்கள் கேள்வியை தன்மையாக கேட்க வேண்டும். தர்க்கம் செய்யக்கூடாது. செய்தியாளர்கள் ஒரு நிறுவனத்திற்காக வேலை செய்கிறார்கள். நான் கொள்கைக்கு வேலை செய்கிறேன். தவறாக கேள்வி கேட்டதால், நான் கூறும் பதிலை உள்வாங்காததால் கோபம் வந்தது.

நான் ஆசிரமங்கள், மடங்களில் இருந்து வரவில்லை. என் ஊர் எப்படிப்பட்டது என்று உங்களுக்கு தெரியும். எங்களை கட்டுப்படுத்தி பக்குவப்படுத்தி வந்து கொண்டுள்ளோம். உங்கள் கருத்தை என் மீது திணிக்க நினைக்கக் கூடாது. அதனால் கோபம் வருகிறது. இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us