/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
ADDED : டிச 13, 2024 04:04 AM
கமுதி: கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரைட்ஸ் திட்டத்தில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 120 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமை நடைபெறும் குறைதீர் முகாமை முறையாக நடத்த வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்டக் குழு உறுப்பினர் முருகன், மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட துணைத் தலைவர் முத்துராமலிங்கம், வட்ட தலைவர் சந்திரன், செயலாளர் முருகேசன், பொருளாளர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

