/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் செயலற்ற ஆர்.ஓ., பிளான்ட்கள் அரசு நிதி வீணாகிறது
/
ஊராட்சிகளில் செயலற்ற ஆர்.ஓ., பிளான்ட்கள் அரசு நிதி வீணாகிறது
ஊராட்சிகளில் செயலற்ற ஆர்.ஓ., பிளான்ட்கள் அரசு நிதி வீணாகிறது
ஊராட்சிகளில் செயலற்ற ஆர்.ஓ., பிளான்ட்கள் அரசு நிதி வீணாகிறது
ADDED : நவ 01, 2024 04:45 AM
கடலாடி: கடலாடி மற்றும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் செயல்படாததால் அரசு நிதி வீணாகியது.
ஊராட்சிகளில் 2017 முதல் 2020 வரை தலா ரூ.14 லட்சத்தில் ஆர்.ஓ.,பிளான்ட்கள் அமைக்கப்பட்டது. இவை பெருவாரியான ஊராட்சிகளில் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. அவற்றை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடலாடி மற்றும் திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், உவர் நீர் உள்ள இடங்களில் ஆழ்குழாய் அமைத்து அவற்றில் இருந்து குடிநீரை சுத்திகரிப்பு செய்து ஊராட்சி மூலம் குடிநீர் முன்பு வழங்கப்பட்டது.
தற்போது முறையான பராமரிப்பின்றி பெருவாரியான ஆர்.ஓ.,பிளான்டுகள் எவ்வித பயன்பாடும் இன்றி பூட்டியே வைத்திருப்பதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறியதாவது:
கோடை காலங்களில் ஆர்.ஓ., பிளான்ட்களில் வழங்கப்படும் குடிநீரை குடம் ரூ.5க்கு விற்பனை செய்ததால் ஊராட்சிக்கு தேவையான வருவாய் கிடைத்தது. தற்போது அவை பராமரிப்பு இல்லாமல் காட்சிப் பொருளாக உள்ளதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் பெயரளவில் செயல்படாமல் உள்ள ஆர்.ஓ., பிளான்ட்களை பழுது நீக்கி முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.