ADDED : மார் 19, 2026 04:37 AM
சாயல்குடி: சாயல்குடி பெரு வணிகர் சங்கம் சார்பில் சமூக மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் விஷ்ணுகாந்த் தலைமை வகித்தார். மதுரை மண்டல தலைவர் செல்லமுத்து துவக்கி வைத்தார். துணைச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட கவுரவ தலைவர் ஜெகதீசன், மாவட்ட செயலாளர் குப்தா ஆர்.கோவிந்தராஜன், சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன், ஜமாத் தலைவர் அப்துல் முத்தலிபு, சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், முன்னாள் சேர்மன் முகம்மது ஜின்னா, பால்காளை, வழக்கறிஞர் சம்சுதீன் சேட் உட்பட ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர். பசுபதி வேல்முருகன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை சாயல்குடி பெரு வணிகர் சங்கத்தினர் செய்திருந்தனர். ரமலான் மாதத்தின் நோன்பின் பெருமைகள் குறித்து ஆன்மிக சொற்பொழிவு ஆற்றப்பட்டது.
