/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாசில்தாருக்கு கொலை மிரட்டல் இமானுவேல் பேரவை நிர்வாகி கைது
/
தாசில்தாருக்கு கொலை மிரட்டல் இமானுவேல் பேரவை நிர்வாகி கைது
தாசில்தாருக்கு கொலை மிரட்டல் இமானுவேல் பேரவை நிர்வாகி கைது
தாசில்தாருக்கு கொலை மிரட்டல் இமானுவேல் பேரவை நிர்வாகி கைது
ADDED : ஜன 30, 2024 12:39 AM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திகேயனுக்கு கொலை மிரட்டல் விடுத்த தியாகி இமானுவேல் பேரவை கிழக்கு மாவட்ட செயலர் கணேசனை போலீசார் கைது செய்தனர்.
திருவாடானை அருகே ஆண்டாவூரணியில் பட்டியலின வகுப்பினரின் மயானத்தை சேதபடுத்தி ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி தாலுகா அலுவலகம் முன்பு தியாகி இமானுவேல் பேரவை சார்பாக குடியமரும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து சமாதான கூட்டம் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. ஆக்கிரமிப்பாளர்கள் மீது எஸ்.பி.பட்டினம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை முடிந்து அனைவரும் சென்றனர். அதன்பிறகு பேரவை கிழக்கு மாவட்ட செயலர் பாகனுார் கணேசன் 40, தாசில்தாரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக வி.ஏ.ஓ., நாகேந்திரன் புகாரில் கணேசனை போலீசார் கைது செய்தனர்.