/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விளாத்திக்கூட்டம் கிராமத்தில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் தடுப்பு

ADDED : செப் 07, 2025 02:58 AM
கடலாடி: கடலாடி அருகே கண்டிலான் ஊராட்சிக்குட்பட்ட விளாத்திக்கூட்டம் கிராமத்தில் அரசின் சாலைப்பணி, குடிநீர் குழாய் பதிக்கும் திட்டங்களை செயல்படுத்தவிடாமல், சில நபர்கள் தடுப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விளாத்திக்கூட்டம் கிராமத்தில் நுாற்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கிராமத்தின் தெற்கு புறம் உள்ள பிள்ளையார் கோயில் முதல் சர்ச் செல்லும் தெருவில் சிமெண்ட் சாலையை சிலர் இடப்பிரச்னையை காரணம் காட்டி மண் அள்ளும் இயந்திரத்தை கொண்டு சேதப்படுத்தினர். இதனை தடுத்து நிறுத்தி இளஞ்சம்பூர் போலீஸ் ஸ்டேஷன், கடலாடி பி.டி.ஓ.,விடம் மக்கள் புகார் தெரி வித்தனர்.
அதன்பிறகு சேதப்படுத்தப்பட்ட சிமெண்ட் சாலையில் தற்காலிகமாக பூசியுள்ளனர். கிராமத்தில் தற்போது குடிநீர் குழாய் பதிக்க விடாமல் அரசின் திட்டங்களை செயல்படுத்த விடாமலும் சிலர் தடுத்து வருகின்றனர்.
'குடிநீருக்காக 2 கி.மீ., சென்று சாலையோரம் செல்லும் காவிரி குடிநீரை தள்ளுவண்டியில் சேகரித்து வருகிறோம். எனவே குடிநீர் உள்கட்டமைப்பு வசதி, குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கிராமத்தினர் கூறினர்.