/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் பாலுாட்டும் அறையில் வசதிகளை மேம்படுத்துங்கள்

ADDED : நவ 30, 2024 06:48 AM

பரமக்குடி; பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் தாய்மார்கள் பாலுாட்டும் அறையில் வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் ஆக.1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வார விழா கடைபிடிக்கப்படுகிறது.
பயண நிமித்தமாக வெளியூர் செல்லும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுாட்டுவதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க 2015ம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பாலுாட்டும் அறைகளிலும் மின்விளக்கு, மின்விசிறி வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதே போல் அறையில் அமர்வதற்கு வசதியாக மேஜை, பெஞ்ச்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பரமக்குடி பஸ்ஸ்டாண்டில் உள்ள அறையில் மின்விளக்கு ஒன்று மட்டும் எரியும் நிலையில் ஸ்விட்ச் போர்டு சேதமடைந்துள்ளது.
மேலும் அறை பராமரிக்கப்படாமல் அதன் அருகில் சமூகவிரோதிகள் மதுபாராக மாற்றி உள்ளனர்.
இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்த பகுதியில் பாலுாட்டும் அறை செயல்படுவதால் அச்சமடைவதால் பஸ் ஸ்டாண்ட் பிரதான பகுதியில் அறையை செயல்படுத்த வேண்டும்
தற்போதைய அறையை குடிநீர் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.