/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் பா.ஜ.,வினர் மக்களிடம் கருத்து கேட்பு
/
பரமக்குடியில் பா.ஜ.,வினர் மக்களிடம் கருத்து கேட்பு
பரமக்குடியில் பா.ஜ.,வினர் மக்களிடம் கருத்து கேட்பு
பரமக்குடியில் பா.ஜ.,வினர் மக்களிடம் கருத்து கேட்பு
ADDED : மார் 13, 2024 12:47 AM

பரமக்குடி, - பரமக்குடியில் பா.ஜ., வினர் லோக்சபா தேர்தல் வாக்குறுதிகளில் என்ன தேவை என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு பெட்டியை பஸ் ஸ்டாண்ட் அருகில் வைத்திருந்தனர்.
லோக்சபா தேர்தல் பா.ஜ., பிரசாரத்தில் பல்வேறு புதுமைகளை புகுத்துகின்றனர். இதன்படி ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று டெல்லிக்கு அனுப்ப உள்ளனர்.
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருத்து கேட்பு பெட்டி வைத்துள்ளனர். வளர்ச்சியடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம், என்ற அடிப்படையில் பேனர்களை வைத்துள்ளனர்.
இதில் நகர் தலைவர் ரவி, பா.ஜ., நிர்வாகிகள் குமார், நாகராஜன், கேசவன், கலாராணி, சங்கர், துரை, பிரகாஷ், கவுன்சிலர்கள் துரைசரவணன், பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.