/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் கனமழையால் 450 ஏக்கரில் நெற்பயிர் மூழ்கியது
/
ராமநாதபுரத்தில் கனமழையால் 450 ஏக்கரில் நெற்பயிர் மூழ்கியது
ராமநாதபுரத்தில் கனமழையால் 450 ஏக்கரில் நெற்பயிர் மூழ்கியது
ராமநாதபுரத்தில் கனமழையால் 450 ஏக்கரில் நெற்பயிர் மூழ்கியது
ADDED : ஜன 11, 2024 04:30 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே போகலுார் ஒன்றியம் பி.முத்துச்செல்லாபுரத்தில்அறுவைடைக்கு தயராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போகலுார் ஒன்றியம் அரியக்குடி புத்துார் ஊராட்சியில் உள்ள பி.முத்துச்செல்லாபுரம் பகுதியில் 1000 ஏக்கருக்கும் மேல் நெல் பயிரிட்டிருந்தனர். இந்த ஆண்டு பெய்த பருவமழையால் பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ராமநாதபுரத்தில் 88 மி.மீ., மழை பெய்தது.
இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களில் மழை நீர் பெருக்கெடுத்தது. விளைந்த நெற்பயிர்கள் மூழ்கியது.
அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவிட்டு நெல் விதைத்து, களை எடுத்து, உரமிட்டு பாதுகாத்து வந்தோம். அறுவடை நேரத்தில் முற்றிலும் மழை நீரில் சாய்ந்து முளைத்துவிட்டது.
வழக்கமாக மழை இல்லாமல் வறட்சியால் பாதிப்பு ஏற்படும். இந்த ஆண்டு மழையால் விளைந்த நெற்பயிர்கள் வீணாகியுள்ளது.
அரசு உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.