/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்ட சரணாலயங்களில்.. பறவைகள் வரத்து ; மழை பெய்து இதமான சூழல் நிலவுகிறது
/
ராமநாதபுரம் மாவட்ட சரணாலயங்களில்.. பறவைகள் வரத்து ; மழை பெய்து இதமான சூழல் நிலவுகிறது
ராமநாதபுரம் மாவட்ட சரணாலயங்களில்.. பறவைகள் வரத்து ; மழை பெய்து இதமான சூழல் நிலவுகிறது
ராமநாதபுரம் மாவட்ட சரணாலயங்களில்.. பறவைகள் வரத்து ; மழை பெய்து இதமான சூழல் நிலவுகிறது
ADDED : ஆக 11, 2024 04:59 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்து இதமான சூழல் நிலவுவதால் சரணாலயப் பகுதிகளுக்கு பறவைகள் வரத்து துவங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், மேலச்செல்வனுார், கீழச்செல்வனுார், தேர்தங்கல், சக்கரக்கோட்டை ஆகிய பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. பறவைகள் அக்., முதல் மார்ச் வரை வலசை வரத் துவங்கும்.
உலகம் முழுவதும் வான்வழி பறவைகள் வலசை பாதைகள் 12 உள்ளன. இந்தியாவுக்கு வரும் பறவைகள் கிழக்கு ஐரோப்பா, மத்திய ரஷ்யா, தென் சீனா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், மங்கோலியா வழியாக மத்திய ஆசிய வான் வழிப்பாதையைத்தான் பறவைகள் அதிகம் தேர்வு செய்கின்றன.
வட பகுதிகளில் குளிர் ஆரம்பித்து அங்கு பருவநிலை மாற்றம் காரணமாக நீர் முழுவதும் பனிக்கட்டிகளாக மாறி விடுவதால் புழு, பூச்சி, மீன் போன்ற பறவைகளுக்கான உணவுகள் கிடைக்காததால் பறவைகள் வலசை வருகின்றன. வலசை வரும் பறவைகளில் சில வகை பறவைகள் நாள் ஒன்றுக்கு 50 கி.மீ., வரை கடக்கும். கோண உள்ளான் போன்ற பறவைகள் தொடர்ந்து 3 நாட்கள் வரை பயணிக்கும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையோரப் பகுதிகளிலும் பறவைகள் வலசை காணப்படும். தற்போது வழக்கத்திற்கு மாறாக ஆக., மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இதமான சூழல் நிலவுகிறது.
இதையடுத்து இப்போதே பல பறவைகள் சரணாலயப்பகுதிக்கு வரத்துவங்கியுள்ளன. ராமநாதபுரத்தில் 160 க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வலசை வருவதாக கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முன் கூட்டியே சீசன் துவங்கியுள்ளதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ------------