/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் நெல் விளைச்சல் அதிகரித்தும் பலன் இல்லை
/
ராமநாதபுரத்தில் நெல் விளைச்சல் அதிகரித்தும் பலன் இல்லை
ராமநாதபுரத்தில் நெல் விளைச்சல் அதிகரித்தும் பலன் இல்லை
ராமநாதபுரத்தில் நெல் விளைச்சல் அதிகரித்தும் பலன் இல்லை
ADDED : மார் 08, 2024 12:38 PM

ராமநாதபுரத்தில் வைக்கோல் கடந்த ஆண்டு விலையை விட இந்த ஆண்டு குறைவான விலைக்கு விற்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நெல்லுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. வைக்கோலுக்கும் உரிய விலை வழங்காததால் பாதிப்புஅடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 28 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. இந்த ஆண்டு ஜன., வரை வடகிழக்கு பருவமழை பெய்தால் ஊருணி, கண்மாய்களில் 80 சதவீதம் தண்ணீர் நிரம்பியது.
ஆர்.எஸ்.மங்கலம், சத்திரக்குடி, புத்தேந்தேல், திருவாடானை, நயினார்கோவில், பேராவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் நெல் வயல்களில் அறுவடை முடிந்து தற்போது வைக்கோல் கட்டும் பணி நடக்கிறது. நெல் விளைச்சல் அதிகரிப்பால் வெளியூர் வியாபாரிகள் வைக்கோல்குறைந்த விலைக்கு கேட்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் 25 ஆயிரம்வரை நெல் சாகுபடிக்கு செலவாகிறது. அறுவடைஇயந்திரக் கூலிக்கு வைக்கோல் விற்றால் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் கடந்த ஆண்டு ரூ.160க்கு விற்ற கட்டு (40 கிலோ) தற்போது ரூ.120 அதுவும்ஏற்றுக்கூலியுடன் சேர்த்து வியாபாரிகள் தருகின்றனர். கால்நடைகள்வளர்ப்போர் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
அதே சமயம் வைக்கோலுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுஉள்ளோம் என்றனர்.

