ADDED : ஆக 17, 2025 12:20 AM
தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் ஆம்புலன்ஸ்சில் பிர சவத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப் பிணிக்கு ஆம்புலன்ஸ்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தேவிபட்டினம் கழனிக் குடி சோலை நகரை சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி கவிதா 23. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் பிரசவத்திற்கு தேவிபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸ்சில் ஏற்றிய சிறிது நேரத்தில் பிரசவ வலி அதிகமாகியது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் உதவியால் ஆம்புலன்ஸ்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தேவி பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், தாயையும், குழந்தையும் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பழனி, ஓட்டுநர் கார்த்திக் ஆகியோருக்கு பெண்ணின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.