/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்கள் பிரச்னையில் த.வெ.க., தடுமாற்றம்
/
மீனவர்கள் பிரச்னையில் த.வெ.க., தடுமாற்றம்
ADDED : நவ 04, 2024 11:02 PM

ராமநாதபுரம்; மீனவர்கள் பிரச்னையில் தமிழக வெற்றி கழகம்(த.வெ.க.,) தலைவர் விஜய் தடுமாறுவதாக ராமநாதபுரத்தில் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சின்னத்தம்பி குற்றம்சாட்டினார்.
அவர் கூறியது: நவ., 3ல் நடந்த த.வெ.க., செயற்குழு கூட்டத்தில் மீனவர்கள் நலனுக்காக போராடுவோம் என தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. அதில் தமிழக மீனவர்கள், இலங்கை தமிழர்கள் பிரச்னைகளை ஒன்றாக பார்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது தமிழக மீனவர்கள் பிரச்னைகள் குறித்த புரிதல் இல்லாத நிலைப்பாடு ஆகும்.
கச்சத்தீவு பிரச்னை ஒன்றை மட்டும் போர்வையாக போர்த்திக்கொண்டு ஒட்டு மொத்த மீனவர்களின் பிரச்னைகளை மழுங்கடிப்பது நல்லதல்ல. 50 ஆண்டுகளாக மத்தியில், மாநிலத்தில் ஆண்ட, ஆளும் கட்சிகள் மீனவர்களை ஏமாற்றி வருகிறார்கள்.
த.வெ.க., கட்சியும் அதே நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தில் உள்நாட்டிலும், கடற்கரையிலும் 60 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் வாழ்வுரிமை பிரச்னைகள் அதிகம்.இது குறித்து தமிழக மீனவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டு த.வெ.க., கட்சி கொள்கையை தயாரித்திருக்கலாம். மீனவர்கள் பிரச்னையில் த.வெ.க., வுக்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். பாதுகாப்பு சட்டம், மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மீனவர்களுக்கு இட ஒதுக்கீடு, தனி தொகுதிகள், வெளிநாடுகளில் மீன் பிடி தொழில் செய்பவர்களின் பிரச்னைகள், உள் நாட்டு மீனவர்கள் பிரச்னை, கடலில் காற்றாலை, பேனா சிலை, மீத்தேன், ைஹட்ரோகார்பன், கனிமம் எடுக்க அனுமதி போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
இதனை கையில் எடுத்து மீனவர்களுக்காக த.வெ.க., போராடினால் மீனவர்கள் வாழ்வில் விடிவு கிடைக்கும் என்றார்.