/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மானாங்குடியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
/
மானாங்குடியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
ADDED : ஜன 18, 2024 05:55 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மானாங்குடியில் ஊராட்சிகளில் முதன் முதலில் திருவள்ளுவருக்கு சிலை திறப்பு விழா மற்றும் சிறுதானிய உணவு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
மானாங்குடி ஊராட்சியில் மாவட்டத்தில் முதன் முதலாக திருவள்ளுவர் சிலை மானாங்குடி ஊராட்சி பெருங்காடுகள் பகுதியில் திறக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி தலைமை வகித்தார். விழாவில் மலேசியாவில் நடந்த உலக அளவிலான அபாகஸ் போட்டியில் 3வது இடம் பிடித்த மாணவி சிபாலி, மாவட்ட அளவில் பரதநாட்டியத்தில் 2வது இடம்பெற்ற மாணவி யோகா ஸ்ரீ ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கினர்.
சிறுதானிய உணவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சி செயலாளர் கருணாமூர்த்தி, துணைத் தலைவர் புஷ்பம், சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.