நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை:கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடந்தது. முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்து அறிமுகம் செய்து வைத்தார். சர்வதேச வாழ்வியல் திறன் பயிற்சியாளர் பால் சுசில் பேசினார். பேராசிரியர் பைரோஸ் கான் வரவேற்றார். கணினி துறை தலைவர் காசி குமார் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை துறை தலைவர்கள் மதினா, ஷோபனா, மலர், பிரபாவதி, பாலமுருகன், உடற்கல்வி இயக்குனர் தவசிலிங்கம், நுாலகர் பால்ராஜ், நிர்வாக அலுவலர் சரவணன் செய்திருந்தனர்.