/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் மெட்ராக்கிள் எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன்ஸ், லேப் திறப்பு விழா

ADDED : மார் 17, 2025 08:06 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரில் மெட்ராக்கிள் எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன்ஸ், லேப்ஸ் திறப்பு விழா நடந்தது.
ராமநாதபுரம் வெங்கடேஸ்வரா கன்ஸ்ட்ரக்சன் குழுமத்தின் சார்பில் ஆர்.ஆர்.சேதுபதி நகரில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மெட்ராக்கிள் எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன்ஸ், லேப்ஸ் திறப்பு விழா நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. புதிய நிறுவனத்தை திறந்து வைத்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திலீப், வெங்கடேஸ்வரா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் இன்ஜினீயர் பால்ராஜ், சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெட்ராக்கிள் ஸ்கேன்ஸ், லேப் மருத்துவ இயக்குநர் ரேடியோ டயக்னோசிஸ் மருத்துவ நிபுணர் டாக்டர் சிந்துஜா பால், நிர்வாக இயக்குநர் டாக்டர் வெங்கட்ராஜ் பால் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
விழாவில் தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச் செயலாளர் வேலுமனோகரன், ராமநாதபுரம் நகராட்சி துணைத் தலைவர் பிரவீன் தங்கம், பத்திரம் எழுதுவோர் சங்க மாநிலப் பொருளாளர் முத்துக்குமார், வெளிபட்டணம் யாதவர் சங்க பொருளாளர் நாகராஜன் பங்கேற்றனர்.