/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் நகரில் நவீன கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை திறப்பு
/
ராமநாதபுரம் நகரில் நவீன கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை திறப்பு
ராமநாதபுரம் நகரில் நவீன கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை திறப்பு
ராமநாதபுரம் நகரில் நவீன கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை திறப்பு
ADDED : டிச 28, 2024 07:24 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரில் குற்றச்செயல்களை கண்டுபிடிக்கும் வகையில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையை எஸ்.பி., சந்தீஷ் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் நகர் பகுதியில் வாகன விபத்துக்களை கண்டுபிடிப்பதற்கும், குற்றங்களை தடுப்பதற்கும், குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறியவும், வாகன வழக்குகள் பதிவு செய்வதற்கும், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களை கண்டறியவும், குற்றச்செயல்களில் ஈடுபட்டு தப்பி செல்லும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் நகரின் முக்கியமான இடங்களில் 17 ஆட்டோமேடிக் நம்பர் பிளேட் ரெககனைசிங் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
நகர், பஜார், கேணிக்கரை, தேவிபட்டினம் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகள், அச்சுந்தன் வயல், பட்டணம் காத்தான், கோப்பேரி மடம் சோதனை சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் 70 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. ரோந்து செல்லும் 3 கார்கள், 4 ஹலோ போலீஸ் டூவீலர்களில் ஜி.பி.எஸ்., மொபைல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அனைத்து கேமராக்களின் காட்சிகள் கண்காணிக்க ராமநாதபுரம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது. இதனை எஸ்.பி., சந்தீஷ் திறந்து வைத்தார். ஏ.எஸ்.பி., சிவராமன் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் செய்திருந்தார்.

