ADDED : டிச 06, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஒன்றியம் புளியங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி செயலக கட்டடம் புளியங்குடியில் ரூ.39.90 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா ஊராட்சி தலைவர் இந்துமதி தலைமையில் நடந்தது.
பா.ம.க., ஒன்றிய செயலாளர் பாலமுருகன், வி.ஏ.ஓ.,ராமையா முன்னிலை வகித்தனர்.
பி.டி.ஓ., அன்புகண்ணன் கட்டடத்தை திறந்து வைத்தார். ஊராட்சி செயலர் ராஜா வரவேற்றார். துாய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. துணைத் தலைவர் வீரலட்சுமி, வார்டு உறுப்பினர்கள், துாய்மை பணியாளர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.