/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வருமானம் ஈட்டும் பனை நார் தும்புகள்
/
வருமானம் ஈட்டும் பனை நார் தும்புகள்
ADDED : அக் 01, 2025 08:05 AM
பூ லோகத்தின் கற்பகத் தருவாக விளங்கும் பனை மரத்தின் அனைத்து பொருட்களும் பயனுள்ளதாகவே விளங்குகின்றன. பிளாஸ்டிக் உள்ளிட்ட செயற்கை பொருள்களுக்கு மாற்றாக இயற்கையாக கிடைக்கக்கூடிய பனை நார் தும்புகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்பட்டு அவை உரிய முறையில் சந்தைப்படுத்தப்படுகின்றன.
நன்கு வளர்ந்து பலன் தரும் பனை மரங்களில் அவற்றின் அடிமட்டை எனப்படும் வெடலி மட்டையை தனியாக வெட்டி பிரித்தெடுக்கின்றனர். இதனால் பனை மரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. 40 முதல் 35 செ.மீ., நீள அகலமுள்ள தும்புகள் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. அவற்றை தண்ணீரில் ஊற வைத்து நீண்ட கூர்மையான சீப்பு போன்ற இயந்திரத்தின் உதவியால் அவற்றை கீறி எடுக்கின்றனர்.
கூர்மையான நரம்பு போன்ற நார் கிடைக்கிறது. இவற்றை ஒரு சேர சேகரித்து பல்வேறு வகையான கலைநய பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக துடைப்பம் மற்றும் மரத்தால் ஆன பிரஷ், கால் மிதியடி உள்ளிட்டவைகளுக்காக தயார் செய்யப்படுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே குதிரை மொழி, மேலக்கிடாரம், கீழக்கிடாரம், காவாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பனை தும்பு தயாரிக்கும் சிறு தொழில் கூடங்கள் உள்ளன. இவற்றை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கருக்கு மட்டைகளை முறையாக வெட்டி அவற்றை வேலி மட்டையாக பயன்படுத்துகின்றனர்.
அவற்றின் மூலமாகவும் பனைத் தொழிலாளர்களுக்கு தேவையான வாழ்வாதாரம் கிடைக்கிறது. முன்பு அதிகளவு பனை மட்டையின் வேலி மூலமாக காம்பவுண்டு சுவர் வேலி மட்டை அமைத்தனர். தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றிற்கும் மாறுதலாக இரும்பு மற்றும் பிளாஸ்டிக் வந்துள்ளதால் பாதிப்பை சந்திக்கின்றனர்.