ADDED : மே 11, 2026 11:39 PM
தேவிபட்டினம்: தேவிபட்டினம் பகுதியில் புழக்கத்தில் உள்ள கஞ்சா பயன்பாட்டை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
தேவிபட்டினம் நீண்ட கடற்கரைப் பகுதியை கொண்ட கடற்கரை கிராமம். தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான மீனவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதிகளில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப் பொருளான கஞ்சா பயன்பாட்டிற்கு அடிமை ஆகி உள்ளனர். இதனால், பெரும்பாலான இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதுடன், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நிலை உள்ளது.
இந்நிலையில், போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து தமிழக முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம், அப்பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
