/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கஞ்சா கடத்தல் அதிகரிப்பு 15 நாட்களுக்குள் 268 கிலோ பறிமுதல்
/
இலங்கைக்கு கஞ்சா கடத்தல் அதிகரிப்பு 15 நாட்களுக்குள் 268 கிலோ பறிமுதல்
இலங்கைக்கு கஞ்சா கடத்தல் அதிகரிப்பு 15 நாட்களுக்குள் 268 கிலோ பறிமுதல்
இலங்கைக்கு கஞ்சா கடத்தல் அதிகரிப்பு 15 நாட்களுக்குள் 268 கிலோ பறிமுதல்
ADDED : ஜூலை 07, 2025 02:26 AM
திருவாடானை : ராமநாதபுர மாவட்ட கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு போலீசார் கெடுபிடியையும் மீறி கஞ்சா கடத்தல் அதிகரித்து வருகிறது. 15 நாட்களுக்குள் 268 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகிறது.
ஆந்திரா, ஒடிசா போன்ற வெளிமாநிலங்களிலும், தமிழகத்தில் தேனி மாவட்ட மலைப்பகுதியிலும் கஞ்சா விளைச்சல் அமோகமாக இருப்பதால் கடத்தல்காரர்கள் அங்கிருந்து கடத்தி வந்து மதுரை வழியாக ராமநாதபுர மாவட்ட கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துகின்றனர்.
ஜூன் 22 இரவு தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வந்த வேனை மரைன் போலீசார் மடக்கி சோதனையிட்ட போது 90 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதே நாளில் புதுக்கோட்டை மாவட்டம் காரக்கோட்டையில் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடற்கரையில் 78 கிலோ கஞ்சாவை எஸ்.பி.பட்டினம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவ்வாறு கடந்த 15 நாட்களுக்குள் 268 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுவிற்கு அடுத்தபடியாக கஞ்சா புகைத்து போதையேற்றி கொள்வது அதிகரித்துள்ளது. குறைந்தளவு கஞ்சா மூலம் ரூ. பல ஆயிரம்சம்பாதிக்க முடிவதால் பண ஆசையில் நிறைய பேர் இத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
கஞ்சா வியாபாரிகள் கஞ்சா கடத்தும் புரோக்கர்களுடன் கைகோர்த்து இத் தொழிலில் ஈடுபட்டுள்ளதால் கடத்தல் தடையின்றி நடக்கிறது.
குறிப்பாக இலங்கைக்கு கடத்துவதால் பல கோடி ரூபாய் லாபம் கிடைப்பதால் பலரும் இச்செயலில் ஈடுபடகின்றனர்.
போலீசார் கூறுகையில், கஞ்சா கடத்தலை தடுக்க இரவு ரோந்து பணி தீவிரபடுத்தபட்டுள்ளது. அனைத்து செக்போஸ்ட்களிலும் சோதனை செய்யபடுகிறது என்றனர்.