/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மான்கள் இறப்பு அதிகரிப்பு; முன்னெச்சரிக்கை தேவை
/
மான்கள் இறப்பு அதிகரிப்பு; முன்னெச்சரிக்கை தேவை
ADDED : ஏப் 26, 2024 12:44 AM
திருவாடானை :
திருவாடானை தாலுகாவில் மான்கள் இறப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை எடுத்து பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகாவில் திருவாடானை, ஓரியூர், சிறுகம்பையூர், அஞ்சுகோட்டை, மங்களக்குடி உள்ளிட்ட நிறைய கண்மாய்களில் மான்கள் கூட்டமாக வசிக்கின்றன. குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் அளவில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளது.
பல்வேறு காரணங்களால் கண்மாயை விட்டு வெளியேறும் போது வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும் பலியாகின்றன. கடந்த 10 நாட்களுக்குள் மூன்று மான்கள் இறந்துள்ளன.
ஓரியூர் மக்கள் கூறுகையில், நிறைய மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. முக்கிய சாலைகளில் மான்கள் கடக்கும் பகுதி 30 கி.மீ. வேகத்தில் செல்லவும் என எச்சரிக்கை போர்டு வைக்கலாம். தற்போது வெறிநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
விலங்குகள் மட்டுமில்லாமல் மனிதர்களையும் கடிப்பதால் பெரும் பாதிப்பாக உள்ளது. நாய்க் கடியால் கிராமங்களில் ஏராளமான ஆடுகள்இறந்துள்ளன. அதே போல் கண்மாயை விட்டு வெளியேறும் மான்களை துரத்தி சென்று கடிக்கிறது. ஆகவே நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

