/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்பதி செல்லும் பக்தர்கள் அதிகரிப்பு டூரிஸ்ட் வாகனங்களுக்கு கிராக்கி

ADDED : அக் 06, 2025 05:44 AM
திருவாடானை : திருவாடானை, தொண்டி பகுதியிலிருந்து திருப்பதிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் செல்வதால் டூரிஸ்ட், வேன், கார்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு திருவாடானை, தொண்டி பகுதியிலிருந்து டூரிஸ்ட் பஸ், வேன் மற்றும் கார்களில் தினமும் பக்தர்கள் செல்கின்றனர்.
திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான தரிசனம் ஆகும்.
மூலிகைகள் அதிகமாக இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. நடந்து மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியமாக உள்ளது. மன அழுத்தம், மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இக் கோயில் மன அமைதியை தரும் என்றனர்.
பக்தர்கள் அதிகமாக செல்வதால் டூரிஸ்ட் பஸ்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஏஜன்ட்கள் பக்தர்களை அழைத்து செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.