/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நோய்கள் அதிகரிப்பு: விழிப்புடன் இருக்க அறிவுரை
/
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நோய்கள் அதிகரிப்பு: விழிப்புடன் இருக்க அறிவுரை
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நோய்கள் அதிகரிப்பு: விழிப்புடன் இருக்க அறிவுரை
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நோய்கள் அதிகரிப்பு: விழிப்புடன் இருக்க அறிவுரை
ADDED : டிச 05, 2024 05:39 AM
திருவாடானை: சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நோய்கள் பரவுதல் அதிகரித்துள்ளதால் நடமாடும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர். விழிப்புடன் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருவாடானை, தொண்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு, மழை மற்றும் வெயிலின் தாக்கம் என சீதோஷ்ண நிலை மாறி, மாறி உள்ளது.
இதனால் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு அதிகமாக உள்ளது. நடமாடும் மருத்துவ குழுவினர் கிராமங்களில் முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்கின்றனர்.
இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைதேகி கூறியதாவது- ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கிராமங்களுக்கு சென்று நோய்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் அரசால் அமைக்கபட்டுள்ளது.
தொண்டி, திருவெற்றியூர், மங்களக்குடி, எஸ்.பி.பட்டினம், பாண்டுகுடி, வெள்ளையபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை வருபவர்களின் எண்ணிக்கை விபரம் கணக்கெடுக்கபடுகிறது. இது தவிர சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மஸ்துார் பணியாளர்கள் வீடு, வீடாக சென்றும் கணக்கெடுக்கின்றனர்.
அதிக நோய் தாக்குதல் இருக்கும் கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவ குழுவினர் சென்று முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்கின்றனர். குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் போன்றவற்றில் குழந்தைகளை காப்பாற்ற பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கபடுகிறது.
பொதுமக்கள் சுத்தமாக இருந்து நோய்களில் இருந்து காத்துக் கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.