/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு
/
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு
ADDED : பிப் 22, 2024 11:13 PM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கடந்த சில வாரங்களாக கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர்.
தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் பள்ளி செல்லும் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளி சென்று வரும் நிலை உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் முக்கிய வீதிகளான பரமக்குடி சாலை, புல்லமடை சாலை, டி.டி.மெயின் ரோடு, அலிகார் சாலை உட்பட முக்கியவீதிகளில் ரோட்டில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிகின்றன.
இந்த நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்பட்டுஉள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் குடியிருப்பு பகுதிகள் மற்றும் ரோடுகளில் சுற்றித் திரியும்நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.