/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேசாளை மீன் வரத்து அதிகரிப்பு: மீனவர்கள் மகிழ்ச்சி
/
பேசாளை மீன் வரத்து அதிகரிப்பு: மீனவர்கள் மகிழ்ச்சி
பேசாளை மீன் வரத்து அதிகரிப்பு: மீனவர்கள் மகிழ்ச்சி
பேசாளை மீன் வரத்து அதிகரிப்பு: மீனவர்கள் மகிழ்ச்சி
ADDED : ஜன 26, 2025 06:55 AM

ராமேஸ்வரம் : குளிர்கால சீசனில் தனுஷ்கோடி கடலில் சுருக்கு மடியில் பேசாளை மீன்கள் வரத்து அதிகரித்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜன., முதல் மார்ச் வரை தனுஷ்கோடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட தீவுப் பகுதியில் பனிப்பொழிவுடன் குளிர் சீசன் நிலவும்.
இதில் பாக்ஜலசந்தி கடலில் பேசாளை, சூடை மீன்கள் வரத்து அதிகரிக்கும். கடந்த சில நாட்களாக தனுஷ்கோடி கடலில் நாட்டுப்படகு மீனவர்கள்சுருக்கு மடியில் மீன் பிடிக்கின்றனர்.
இதில் கூட்டமாக வரும் பேசாளை மீன்கள்டன் கணக்கில் சிக்குகின்றன.
ருசியான இந்த மீனை கேரள அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் இந்த மீனை கிலோ ரூ.50 முதல் 60 வரை ராமேஸ்வரம் வியாபாரிகள் வாங்கி ஐஸ்சில் பதப்படுத்தி கேரளாவுக்கு அனுப்புகின்றனர்.
தற்போது பேசாளை மீன்கள் வரத்து அதிகரித்து உரிய விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

