தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வரத்து குறைவால் நிலக்கடலைவிலை அதிகரிப்பு: கிலோ ரூ.60

வரத்து குறைவால் நிலக்கடலைவிலை அதிகரிப்பு: கிலோ ரூ.60

வரத்து குறைவால் நிலக்கடலைவிலை அதிகரிப்பு: கிலோ ரூ.60


ADDED : செப் 16, 2026 04:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 04:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நிலக்கடலை விளைச்சல் குறைந்தும், வெளியூர்களில் இருந்தும் வரத்து இல்லாததால் விலை உயர்ந்து கிலோ ரூ.60 வரை விற்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நயினார்கோவில், கமுதி, முதுகுளத்துார், சிக்கல் உள்ளிட்ட இடங்களில் நெல், மிளகாய், பருத்திக்கு அடுத்தபடியாக விவசாயிகள் கடலை, எள் போன்ற எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இவ்வாண்டு போதிய மழை இல்லை. குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் நிலக்கடலை விளைச்ச குறைந்துள்ளது.

மேலும் சந்தைக்கு வெளியூர்களில் இருந்து வரத்தின்றி  கடந்த மாதம் கிலோ ரூ.40 முதல் ரூ.50க்கு விற்ற நிலக்கடலை தற்போது கிலோ ரூ.60 வரையும், ஒரு படி ரூ.50க்கும் அதன் ரகம் மற்றும் ஈரப்பதத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது என வியபாரிகள் கூறினர்.––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us