/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடைகாலத்தில் லாரி குடிநீர் விற்பனை அதிகரிப்பு: பாதுகாப்பற்ற முறையால் நோய்த்தொற்று அபாயம்

ADDED : ஏப் 23, 2024 12:07 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர், கிராமப்புறங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில்குழாயில் விநியோகம் செய்கின்றனர்.
இந்த குடிநீர் சில நாட்கள் மட்டும் வருவதால் நகர், கிராமப்புறங்களில் தனியார் லாரிகளில் கொண்டுவரப்படும் குடிநீர் மற்றும் கேன்களை வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால்தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக லாரிகளில் குடிநீர் விற்பனை ஜோராக நடக்கிறது. சாதாரணமாக குடிநீர் குடம் ரூ.7க்கும், சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு குடம் ரூ.13க்கு விற்கப்படுகிறது.
மாவட்டத்தில் முறைப்படி அரசு அனுமதியுடன் 12 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றை தவிர்த்து சிலர் அனுமதியின்றி லாரிகளில் குடிநீர் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துஉள்ளது.
குறிப்பாக கிராமங்களில் சிலர் பாதுகாப்பாற்ற குடிநீரை விற்பனை செய்கின்றனர். இதனால் நோய்த்தொற்று அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
எனவே ஐ.எஸ்.ஐ., முத்திரை ஒட்டிய தரமானகுடிநீர் கேன், பாட்டில்கள்விற்பனையை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத் துறையினர், பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக நகராட்சி, பேரூராட்சி மற்றும் தனியார் லாரிகளில் குடிநீரில் குளோரின் கலப்பு, துாய்மையை ஆய்வு செய்து சுத்தமான குடிநீர் விற்பனையை உறுதி செய்ய வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.