/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமங்களில் மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு
/
கிராமங்களில் மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு
ADDED : டிச 04, 2024 08:02 AM

திருப்புல்லாணி, : திருப்புல்லாணி சுற்று வட்டார பகுதிகளான தினைக்குளம், களிமண்குண்டு, வண்ணாங்குண்டு, பெரியபட்டினம், முத்துப்பேட்டை, ரெகுநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் மாமரங்கள் உள்ள நிலையில் விளைச்சல் அதிகரித்துள்ளது.
இங்குள்ள மாமரங்களில் மாங்காய்களை பறித்து ராமநாதபுரம் நகர் பகுதியில் விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர். களிமண்குண்டு ஊராட்சி சவட்டையன் வலசை பகுதி மா வியாபாரிகள் கூறியதாவது:
இப்பகுதியில் அதிகளவில் மாமரங்கள் உள்ளதால் பருத்த சமையலுக்கு ஏற்ற நிலையில் உள்ள மாங்காய்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. மாங்காய் பச்சடி செய்வதற்கு ஏற்ற வகையில் மாங்காய்கள் அதிக சுவையுள்ளதாக உள்ளன.
வடுமாங்காய் ஊறுகாய்க்காக சிறிய ரக மாங்காய்களும் உள்ளன. அதிக ருசியும் இனிப்பும் கொண்ட மாம்பழங்கள் விளைவிப்பதற்காக பெரும்பாலானோர் பறிக்காமல் விட்டுள்ளனர். இப்பகுதியில் கிளி மூக்கு, குண்டு ரகம், பங்கனபள்ளி உள்ளிட்ட பல ரக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன என்றார்.