/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மரியாதை அறிவிப்பால் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு
/
அரசு மரியாதை அறிவிப்பால் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு
அரசு மரியாதை அறிவிப்பால் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு
அரசு மரியாதை அறிவிப்பால் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு
ADDED : நவ 02, 2024 08:18 AM
திருவாடானை, : உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்ற அறிவிப்பால் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. விபத்து மற்றும் சில வகை நோயால் மூளைச்சாவு அடையும் நோயாளிகளிடமிருந்து இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் தானமாக பெறுவதால் பலரின் வாழ்க்கைக்கு உதவுகிறது. உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.
கலெக்டர் நேரில் செல்வார். அவர் வர முடியாவிட்டால் டி.ஆர்.ஓ., அல்லது ஆர்.டி.ஓ., சென்று மரியாதை செலுத்துவார்கள் என அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகாவில் ஒரு மாதத்திற்குள் பாண்டுகுடியை சேர்ந்த திருமலை, கற்காத்தகுடியை சேர்ந்த இக்னேஷியஸ்ராஜ் ஆகியோர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தம் உறுப்புகளை கொடுப்பதால் பல உயிர்கள் காக்கப்படுகின்றன.
உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது.
இந்த அரசின் அறிவிப்பை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கிராமங்களுக்கு சென்று முகாம் நடத்தி தெரியப்படுத்தினால் விழிப்புணர்வு ஏற்பட்டு உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாகும் என்றனர்.

