/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டியில் வெளி மாவட்ட திருட்டு வாகனம் அதிகரிப்பு
/
தொண்டியில் வெளி மாவட்ட திருட்டு வாகனம் அதிகரிப்பு
ADDED : அக் 05, 2024 04:00 AM
தொண்டி: தொண்டியில் கோவை, திருப்பூர் போன்ற வெளி மாவட்டங்களில் உள்ள திருட்டு வாகனங்கள், உரிய ஆவணங்களே இல்லாத வாகனங்கள் ஓடுவதாக புகார் எழுந்துள்ளது.
சமூக விரோத கும்பல்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தொண்டி வக்கீல் கலந்தர்ஆசிக் கூறியதாவது:
தொண்டியில் அதிகமான கார்கள், டூவீலர்கள்இயக்கப்படுகின்றன. இதில் கோவை, திருப்பூர் போன்ற வெளி மாவட்ட எண்கள் கொண்ட வாகனங்கள் இயங்கி வருகிறது.
விபத்து ஏற்படும் போது மக்கள் அந்த எண் கொண்ட வாகனங்கள் குறித்து போலீசில் புகார் செய்யும் போது போலி என தெரிய வருகிறது.
திருட்டு வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்கும் சிலர் பதிவு செய்ய ஆவணங்கள் இல்லாமல் தடுமாறி பின் போலியான ஆவணங்களை தயார் செய்து பதிவு செய்கின்றனர்.
தொண்டியில் 2ம் விற்பனை ஆன கார் உள்ளிட்ட டூவீலர்கள் நிறைய உள்ளன. இன்சூரன்ஸ், ஆர்.சி., இல்லாததால் சாலை வரி செலுத்தமால் உள்ளனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும்போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.