/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பூஜை பொருட்களின் விலை உயர்வு: வாழைக்கன்று ரூ.60
/
பூஜை பொருட்களின் விலை உயர்வு: வாழைக்கன்று ரூ.60
ADDED : அக் 12, 2024 04:28 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலத்தில் பூஜை பொருட்களின் விலை உயர்ந்தது. வரத்தின்றி வாழைக்கன்று ஜோடி ரூ.60க்கு விற்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மையப்பகுதியாக விளங்கி வருகிறது. நேற்று ஆயுத பூஜை என்பதாலும், இன்று விஜயதசமி பூஜை என்பதாலும் நேற்று பொதுமக்கள் பூஜை பொருட்களை வாங்கிச் செல்வதில் ஆர்வம் செலுத்தினர்.
வாழைக்கன்றுகள் ஜோடி 30 முதல் ரூ.60 வரையிலும், தேங்காய் 20 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டது. கதம்பம், மல்லிகை, மாலை உள்ளிட்டவைகள் வழக்கத்தை விட இரட்டிப்பு விலையில் விற்பனையானது. இதனால்பொருட்கள் வாங்கி சென்ற பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

